வெடிமருந்துகளை உபயோகித்து மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

மன்னார் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு  மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, வெடிபொருட்களைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரே இவ்வறு நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 33, 32, 30 மற்றும் 27 வயதுடைய மன்னாரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுடன் ஒரு டிங்கி, ஒரு வெளிப்புற மோட்டார் மற்றும் 358 கிலோ கிராம் சட்டவிரோதமாக பிடிபட்ட மீன்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை பின்னர் மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது.