வெங்­காய வெடி வைத்து பிரிந்திருந்த மனைவியை கொலை செய்த கவணன்

வவு­னியா செட்­டி­குளம் கங்­கங்­குளம் கிரா­மத்தில் வெ ள்ளி இரவு  பெண்­ணொ­ருவர் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கங்­கங்­கு­ளத்தில் வசித்து வந்த ர. அந்­தோ­ணி­யம்மா  என்ற நான்கு பிள்­ளை­களின் தாயே இவ்­வாறு கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

நீண்ட நாட்­க­ளாக கணவன் மனைவி இரு­வரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அண்­மைக்­கா­ல­மாக மனைவி தனி­யாக வீடொன்றில் வசித்து வந்­த­தாகத் தெரி­ய வ­ரு­கின்­றது.

இந்­நி­லையில், கண­வனால் வெங்­காய வெடி என தெரி­விக்­கப்­படும் உள்­ளூரில் மிரு­கங்­களை வேட்­டை­யா­டு­வ­தற்­காக பயன்­ப­டுத்தும் வெடி­யினை பயன்­ப­டுத்­தியே மனை­வியை கொலை செய்­துள்­ள­தாக பொலிஸார் மேற்­கொண்ட ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில் இருந்து   தெரியவருகிறது.

இதுதொடர்பில்  செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன் னெடுத்துள்ளனர்.