பிரதமர் திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளார்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அதன்படி அவர் எதிர்வரும் 27ஆம் திகதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, அவர் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய திருகோணமலை மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட 1000 வீடுகளில், நிர்மாணப் பணிகள் நிறைவுசெய்யப்பட்ட 200 வீடுகளை பிரதமர் பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார்.

மேலும் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய அகதிகளில், புள்ளிகளின் அடிப்படையில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட 450 குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் செலவில் வீடுகளை அமைப்பதற்கான பயனாளிகள் தெரிவுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் 378 தொண்டர் ஆசிரியர்களுக்கும் கிழக்கு மாகாணத்தில் 739 தொண்டர் ஆசிரியர்களுக்குமான நிரந்தர நியமனங்களும் இந்த விஜயத்தின்போது வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

2Shares