அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக இராணுவ உயர் அதிகாரியை பரிந்துரை செய்தார் ட்ரம்ப்!

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக இராணுவ உயர் அதிகாரி மார்க் எஸ்பர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் இவரை பரிந்துரை செய்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக பணியாற்றி வந்த பெட்ரிக் ஷனஹான் தனது குடும்ப பிரச்சினை காரணமாக பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதனால் வெற்றிடத்திற்கே இராணுவ உயர் அதிகாரியாக பணியாற்றிய மார்க் எஸ்பரை நியமிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.