42ஆவது உபசம்பதா நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் அமரபுர அரியவங்ச சத்தம்மயுக்திக்க பிரிவின் 42ஆவது உபசம்பதா நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்குபற்றுதலுடன் நேற்று பிற்பகல் கல்லேல்ல புலத்திசி கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றது.

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் அமரபுர அரியவங்ச சத்தம்மயுக்திக்க பிரிவின் உபசம்பதா நிகழ்வு நேற்று முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், 100 பிக்குகள் இந்த நிகழ்வில் “உபசம்பதா” சமயப் பணியில் ஈடுபட்டனர்.

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்க தேரர் ஸ்ரீ கொட்டுகொட தம்மாவாச மகாநாயக்க தேரரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பங்குபற்றிய ஜனாதிபதிக்கு 42ஆவது உபசம்பதா நிகழ்வை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு சஞ்சிகை வழங்கிவைக்கப்பட்டது.

 

இதேவேளை புலத்திசி கல்வியியற் கல்லூரியில் நிர்மாணிக்கப்படும் பிக்குகளுக்கான தங்குமிடத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய ஏகொடமுல்லே அமரமோலி  மகாநாயக்க தேரர், சங்கைக்குரிய கலாநிதி வல்பொல விமலஞான அனுநாயக்க தேரர், சங்கைக்குரிய கதுருவெல தம்மபால நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் பொலன்னறுவை நகரபிதா சானக்க சிதத் ரணசிங்க, மாவட்ட செயலாளர் பண்டுக்க அபேவர்தன உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.