3 டிப்பர் மண் ஒரே இரவில் திருட்டு ;யாழில் சம்பவம்

யாழில். வீதி சீரமைப்பு பணிகளுக்கு என வீதியில் பறிக்கப்பட்டிருந்த 3 டிப்பர் மண் ஒரே இரவில் திருடப்பட்டுள்ளது.

 

கிராம எழுச்சி திட்டத்தின் கீழ் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வீதி சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள வீதி ஒன்றினை சீரமைக்கவென வீதியோரமாக 3 டிப்பர் மண் பறிக்கப்பட்டிருந்தது. அதனை இனம் தெரியாதவர்கள் ஒரே இரவில் திருடி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட வாகனத்தினை அருகில் பொருத்தபட்டு இருந்த மறை காணிகள் (CCTV) மூலம் அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது