வெங்காய வெடிவைத்து மனைவியை கொலை செய்த கணவன் காட்டுக்குள் ஓடி மாயம்..

வேட்டைக்கு பயன்படுத்தப்படும் வெங்காக வெடியை பயன்படுத்தி மனைவியை கொலை செய்த கணவனை தேடி செட்டிகுளம் காட்டு பகுதியில் பொலிஸாா் தீவிர தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றனா்.
உள்ளூரில் மிருகங்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் வெங்காய வெடி என அழைக்கப்படும் வெடிபொருள் மூலம் நான்கு பிள்ளைகளின் தாயான 40வயதுடைய ரவிச்சந்திரன் அந்தோனியம்மா என்ற குடும்ப பெண்
படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வெடியினை அவரது தலைப்பகுதியில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சடலத்தினை நேற்றிரவு (21.06) பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.
இக் கொலை தொடர்பாக குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் செட்டிக்குளம் பொலிஸார் இன்றையதினம் மோப்பநாயின் உதவியுடன் வீட்டிற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில்
சந்தேகநபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பெண் வெங்காய வெடி மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் குறித்த கொலையாளி அந்த வெடிபொருள் மூலம் படுகாயமடைந்த நிலையிலேயே
தப்பியோடியுள்ளார் என்று செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக முரண்பாடு காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.