வவுனியாவுக்குச் சென்ற அண்ணன், தம்பியைக் காணவில்லை – பொலிஸில் முறைப்பாடு

நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற இருவரைக் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை ஒருவர் இன்று (சனிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு பகுதியிலிருந்து பேருந்தில் வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணை ஒன்றிற்குச் சென்ற இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தந்தையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயசுந்தர் தர்சன் வயது 19, விஜயசுந்தர் நிதர்சன் வயது 16 ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாகவும் இவர்களை கண்டுபிடித்துத்தருமாறு தந்தை வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள இருவர்களையும் பற்றிய தகவல்களை அறிந்திருப்பவர்கள் 0775415912, 0775261259 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.