Home இலங்கை செய்திகள் ரணில் உள்ளிட்ட நால்வரை விசாரணைக்கு அழைக்க தீர்மானம்

ரணில் உள்ளிட்ட நால்வரை விசாரணைக்கு அழைக்க தீர்மானம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு இராஜங்க அமைச்சர், சட்ட ஒழுங்கு முன்னாள் அமைச்சர்கள் இருவரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற  குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் தெரிவுக்குழுவில் ஆஜராகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அத்தோடு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மற்றும் சட்ட ஒழுங்கு முன்னாள் அமைச்சர்கள் இருவரையும் அந்த குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.