பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் தொகுதிகள் பொதுமக்களிடம் கையளிப்பு

வினைத்திறன்மிக்க அரச சேவையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பொலன்னறுவை மாவட்டத்தின் 07 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் நிர்மாணிக்கப் பட்டுள்ள 180 உத்தியோகபூர்வ பணியகங்கள் மற்றும் 02 புகையிரத உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

 

தமன்கடுவை, திம்புலாகல, வெலிகந்த, லங்காபுர, மெதிரிகிரிய, ஹிங்குரக்கொட, எலஹெர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த உத்தியோகபூர்வ பணியகங்கள் நிர்மாணிக்கபட்டுள்ளதுடன், கிராம சேவகர் பிரிவுகளில் சேவைபுரியும் கிராம சேவகர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள் ஆகிய அரசாங்க அதிகாரிகளின் சேவைகளை ஒரே இடத்தில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வசதிகள் உத்தியோகபூர்வ பணியகங்களின்மூலம் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 30 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.  இதேவேளை புகையிரத உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்காக 485 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.