நிறைவுக்கு வந்தது போராட்டம்..! ஞானசார தேரா் வழங்கிய உறுதி மொழி..

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி 6 நாட்களாக நடைபெற்ற உணவு தவிா்ப்பு போராட்டம் சற்று முன்னா் நிறைவுக்கு வந்துள்ளது.
மதத் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் கடந்த ஆறு நாட்களாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில் தற்போது குறித்த உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றையதினம் போராட்டக்களத்திற்கு விஜயம் செய்து
கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். இந்நிலையில் 1 மாதகாலத்திற்குள் பிரதேச செயலகம் தரம் உயா்த்தப்படும் எனவும்
உயா்த்தப்படாவிட்டால் அதனை தாம் பாா்ப்பதாக கூறினாா். அதன் பின்னரே குறித்த உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.