நல்லாட்சி அரசு காலத்தில் அபகரிப்புக்கள் அதிகரிப்பு தென் கயிலை ஆதீன குரு முதல்வர் கவலை

(முழுமையான வீடியோ இணைப்பு) நல்லாட்சி அரசு காலத்திலேயே அதிகமான தமிழரிற்க்கு எதிரான் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன என்றும் வடக்கையும் கிழக்கையும்  இணைக்கும் தென்ன மரமாவடி பகுதியல்   சிங்களக் குடியேற்றம் செயவது வருவதானால் வடக்கு கிழக்கு இணைப்பை இல்லாதொழிக்கும் நடவடிக்கை திரை மறைவில் இடம் பெறுவதாகவும்   தென் கயிலை  ஆதீன குரு முதல்வர் தெரிவி்த்துள்ளார் அண்மையில் எமது www.itctamil.com க்கு வழக்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கும் போது

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறiவா போற்றி.

திருமலையில் இன்று எங்களுடைய தொன்மை வாய்ந்த நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்படுவது யாவரும் அறிந்ததே 6000 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு பழம் பெருமை வாய்ந்த சரித்திரம் வாய்ந்த,தொன்மை வாய்ந்த இடம் எமது திருகோணமலை. தென்கயிலை என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானால் இங்கு அமர்ந்து அவருடைய ஆட்சி நடாத்துகின்ற இடமாக கருதப்படுகின்ற இடம். இராவணன் வழிபட்ட இடம். இராவணன் தனது தாயாரது ஈமைக்கிரியைகளை செய்வதற்க்காக ஏழு கிணறுகளை உருவாக்கி ஈமைக்கிரியைகள் செய்தான் என்பது புராண வரலாறு சோழர்கள் ஆண்டிருக்கிறார்கள் சோழ பாண்டியர் மூவேந்தர்களும் ஆண்டிருக்கிறார்கள். அதை விட இங்கே எங்களுடைய தமிழ் மன்னர்களுடைய ஆட்சி இடம் பெற்றிருக்கின்றது. அப்படிப்பட்ட சரித்திரப் பின்னணி கொண்ட இடத்தில் கன்னியாவில் அமைந்திருக்கின்ற ஒரு ஆலயம் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக புனரமைப்பு செய்ய முற்பட்ட போது அங்கே ஒரு புத்த பிக்குவால் (வில்கம் விகாரை) அது நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து  தொல்பொருட் திணைக்களம் தனது ஆளுகைக்கு உட்படுத்தியது. எங்களுடைய தொன்மையான பாரம்பரியம் மிக்க இடம் தொல் பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த இடத்தில் நான்கு ஐந்து வருடங்களுக்கு மேலாக அங்கு அமைந்துள்ள சிவன் ஆலயத்திற்கு பூசை செய்து வருகின்றோம்.

கன்னியாவினுடைய பிள்ளையார் ஆலயத்தை பொறுத்த வரையிலே அது யாராலும் அணுக முடியாத ஒரு சிதைந்த இடமாகவே இருந்தது. பிள்ளையாரை அவர்கள் தூக்கி வெளியில் வைத்திருந்தார்கள். அது ஒரு மண்மேடாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. கடந்த 21.05.2019 அங்கு நாங்கள் சென்று ஏன் உடைக்கிறீர்கள் எனக் கேட்ட போது அவர்கள் சொன்னார்கள் “நாங்கள் ஒரு புத்த விகாரையை அமைக்கவுள்ளோம்” என்றார். உடனடியாக உடைப்பையும் விகாரை அமைக்கும் பணிகளையும் நிறுத்துமாறு நாம் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் மாவட்ட செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசினோம் பிற்பகலில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது உடனடியாகவே பிள்ளையார் கோவில் இருந்த இடத்தை உடைத்து புத்த விகாரை அமைப்பதை நிறுத்தியுள்ளோம் என்று இருந்தும் மறுநாள் காலையில் அவ்விடத்திற்கு சென்ற வேளை ஒரு புத்த பிக்கு தலைமையில் மீண்டும் புத்த பிக்கு தலைமையிலான பிள்ளையார் கோவில் இருந்த அத்திவாரத்தை உடைத்தவர்களை கேட்ட போது மீண்டும் அதே பதிலை தந்தார்கள் அதாவது “பௌத்த விகாரை அமைக்கவுள்ளதாகவும்” குறிப்பிட்டனர் உடனடியாக இது விடயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும் திருமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் உடன் பேசினோம் அதற்கு பின்னர் அரை மணிநேரம் கழித்து எம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கௌரவ சம்பந்தன் அவர்கள் பிரதமர், தொல்பொருட் திணைக்களம் மாவட்ட செயலர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு உடனடியாக விகாரை கட்டும் பணியை நிறுத்தி விட்டதாக தெரிவித்தார் அதே நாளே (22.05.2019) திருமலை மாவட்டச் செயலரையும் சந்தித்தோம். அவர் எம்முடன் பேசும் போது கன்னியா பிள்ளையார் ஆலயம் இருப்பதை ஒப்புக்கொண்டே எம்மிடம் பேசியதுடன் 23.05.2019 அன்று சம்பவ இடத்திற்கு வருவதாகவும் தெரிவித்திருந்தார். மறு நாள் காலை அங்கு சென்றிருந்தோம் அந்த புத்த பிக்குவும் அவர் சீடராக இருந்த ஒருவரும் அவருடன் சேர்ந்து சிலரும் பிள்ளையார் ஆலய வளாக காணிக்குரிய அம்மாவும் நாமும் அங்கு சமூகமளித்திருந்தோம். காணிக்குரிய சகல ஆதாரங்களையும் மாவட்ட செயலாளர் முன் ஆலய காணிஉரிமையாளரான கோயில் அம்மா காண்பித்தார் அதே வேளை அங்கு சமூகமளித்திருந்த பிக்குவும் அவ்வாறான ஆதாரங்களை வைத்திருப்பதாக தெரிவித்தார். அந்த கோவிலுக்குரிய உண்மையான உரிமையாளரான அந்த பெண்மணி பிரித்தானியா காலத்து காணி ஆவணங்கள் தம் வசம் வைத்திரு;கின்ற நிலையில் எவ்வாறு அந்த புத்த பிக்கு இவ்வாறான ஆவணங்களை வைத்திருக்க முடியும் அந்த பெண்மணி மாரியம்மாள் கோவில் தர்ம கர்த்தா அவர் அவரது பராமரிப்பிலே கன்னியா பிள்ளையார் ஆலயம் இருந்திருப்பதாக அந்த சாசனத்தில் சொல்லப்படுகிறது. ஆக இந்த பிரச்சினைகளை எங்களுடைய சைவத்தினுடைய தமிழினுடைய இருப்பினை கேள்விக்குட்படுத்துவதாக இருக்கின்றது. என்றும் தெரிவித்த தென்கையிலை ஆதீன குரு முதல்வர் அகத்தி அடிகளார்.

மேலும் கருத்து தெரிவித்த தென்கையிலை ஆதீன குரு முதல்வர் அகத்தி அடிகளார் தென்னைமரவாடியில் கந்தசாமி மலையிலிருந்த ஆலயம் உடைக்கப்பட்டிருக்கின்றது. அங்கு இருந்து மக்கள் 35 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெயர்ந்து இருந்து தற்போது மூன்று ஆண்டுகளாகவே மீள குடியமர்ந்திருக்கிறார்கள். அங்கும் கந்தசாமிமலையில் இருந்த முருகன் ஆலயம் தமது இடம் எனக் கூறி ஒரு புத்த பிக்கு தலைமையில் ஆலயம் உடைக்கப்பட்டு அங்கு ஒரு புத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம் பெறுகின்றன. நாம் அங்கு சென்ற போது எம்மை அங்கு செல்ல தொல்பொருள் திணைக்களம் அனுமதிக்கவில்லை ஆனால் தொல்பொருட் திணைக்களம் அதனைத் தாங்கள் தான் கட்டுவதாக எம்மிடம் தெரிவித்திருந்தனர்.இது விடயமாக பிரதேச சபை தவிசாளருடன் தொடர்பு கொண்டு கதைத்த போது தாம் குறித்த விகாரைக் கட்டிடத்தை அகற்றுவதற்கு பகிரங்க அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் தம்மிடம் தெரிவித்ததாக தெரிவிக்கும் தென்கயிலை குரு முதல்வர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; பிரதேச சபை உரிய கட்டுமாண பணிகளை நிறுத்துமாறு கட்டளையிடப்பட்டிருக்கின்றது. தொல் பொருட் திணைக்களம் தமது பணிகளைத் தொடர்கிறது ஒரு அரசு இயந்திரம் நிறுத்தச் சொல்கிறது இன்னொர் அரசு இயந்திரம் செயல்ப்படுத்துகின்றது. எங்களுக்கு தொல் பொருட்திணைக்களம் தாங்கள் செய்வதாக தெரிவித்திருக்கிறது. ஆனால் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும்பிக்குவானவர் வீதி வழியாக வராமல் கடல் வழியாக இரவு வேளைகளில் வந்தே கட்டுமானப்பணிகளில்ஈடுபடுவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு தொல்பொருள் திணைக்களத்தினுடைய அபகரிப்புக்கள் எமது பூர்வீக நிலங்கள்.திருமலையில் பறிபோய்க்கொண்டிருக்கும் நிலையே உள்ளது.

கேள்வி – திருமலை பகுதிகளில் தமிழரது பூர்வீக இடங்களையும் தமிழரது குடிப்பரம்பலையும் குறைக்கின்ற வகையிலும்; வடக்கு கிழக்கை பிரிக்கின்ற வகையிலும் ஆக்கிரமிப்புக்கள் குடியேற்றங்கள் இடம் பெறுகிறதாக அறிகிறோம் இது தொடர்பாக
பதில் – இந்த விடயங்கள் தொடர்பு நாங்களும் அப்படித்தான் அறிகிறோம் அப்படித்தான் நடப்பதாக நாங்களும் உணர்கிறோம் மக்களும் அவ்வாறு தான் உணர்கிறார்கள் வடக்கினதும் கிழக்கினதும் இதய பூமியாகவே தென்னமரவாடி காணப்படுகிறது. தென்னமரவாடியினுடைய பகுதியை நிரந்தரமாக பிரித்து விட்டால் வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்ற பேச்சுக்கே இடமில்லாது போய்விடும் அந்த வகையில் தான் இங்கே 13 க்கு மேற்பட்ட விகாரைகள் (குச்சவெளி பிரதேசத்தில); அமைக்கப்பட்டடுள்ளன. ஒவ்வொரு விகாரைகளுக்கும் 300 ஏக்கர் 400 ஏக்கர் 500 ஏக்கர் காணிகளை அவர்களது பூஐh பூமி திட்டத்திற்கு அவர்கள் கோருகிறார்கள் அந்த பூமி அவ்வளவும் அவர்களுக்கு போய்ச் சேர்ந்தால் அந்த இடம் அவ்வளவும் சிங்கள குடியேற்றம் ஏற்படுத்தப்படும் அவ்வாறு சிங்கள குடியேற்றம்  இடம் பெற்றால் வடக்கும் கிழக்கும் தமிழர்களது பூர்வீக நிலங்கள் என்கின்ற நிலையிலிருந்து பிரிபட்டு வேறு வேறு மாகானங்;களாக ஆகிவிடும் எனவே தமிழர்களுடைய பூர்வீகமான வடக்கு கிழக்கு இணைப்பு அல்லது பூர்வீகம் என்ற நிலைமாறி சிங்களவர் குடியேற்றம் என்ற நிலையில் முடித்து விடும் அதைத் தான் இவ்வாறு எல்லாக் கிராமங்களில் தொல் பொருட் திணைக்களம் திட்டமிட்டு செயற்படுத்தி வருகிறது.
கேள்வி – 2015 பின்னர் நல்லாட்சி அரசு என்று சொல்லிக் கொண்டு ரணில் அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் நிலைமைகள் எப்படி இருக்கின்றன என கேட்ட போது.
பதில் – நல்லாட்சி அரசு என்று சொன்னவர்களது கால கட்டத்தில் தான் முழுத் தீவிரமான பூர்வீக நிலங்கள் அபகரிப்பு சிங்கள குடியேற்றம் தமிழ் அடையாளங்களை அழித்து புத்த விகாரை அமைப்பதும் அதிகரித்திருக்கின்றது. அண்மையில் இடம் பெற்ற குண்டுவெடிப்புக்கு பின்னர் தான் (21.04.2019) இவை அதிகரித்திருக்கின்றன குறிப்பாக கன்னியாவில் அழிப்பு பிரச்சினைகள் இடம் பெறுகிறது. தென்னைமரவாடி கந்தசாமி மலையில் கட்டும் பணிகள் இடம் பெறுகிறது. இவை இரண்டு பிரச்சினைகளும் நல்லாட்சி அரசாங்கத்தில் தான் நடக்கின்றது அதாவது நல்லாட்சி அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் தான் நடப்பதாக தான் திருமலை தமிழர்கள ஆகிய நாம்; கருதுகின்றோம்.
கேள்வி – இவ்விடயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் தலைமைகளிடம் முறையிட்டிருக்கின்றீர்கள். இது தொடர்பாக தமிழ் அரசியல் தலைமகள் உரிய நடவடிக்கைகளை எடுத்ததாக கருதுகிறீர்களா
பதில் – தற்காலிக நிறுத்தம் என்பது நிரந்தர, பூரண நிறுத்தம் அல்ல இது தங்களது செயற்பாடுகளை ஆறப் போடுவதாகவே நாங்கள் பார்க்கிறோம் சிங்கள சமூகம் அல்லது ஆழ்ந்த சிந்தனையுடைய பௌத்த சமூகம் இந்த பிரச்சினையை  ஆறப் போடுவதற்க்கான ஒரு இடைவெளியாகவோ அல்லது அதந்க்கான நேரமாகத் தான் கருதுகிறது. இது ஒரு நிரந்தரமான தீர்வு அல்ல இதை சரியான முறையில் தமிழ் அரசியல் தலைமைகள் அணுக வேண்டும் அணுகித்தான் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் அதற்குரிய பொறுப்பும் கடமையும் அவர்களிடம் இருக்கின்றது.
கேள்வி – தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை எப்படிக் கருதுகிறீர்கள்
பதில் – தொடரக் கூடிய வாய்ப்புக்கள் தான் பெரும்பாலும் இருக்கிறது தொடர்வார்கள் என்று தான் நாங்கள் நினைக்கின்றோம். அவர்கள் தொடராமல் ஒரு போதும் நிறுத்த மாட்டார்கள்.என்றார்