திருக்கோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் நிதி உதவி வழங்க இணக்கம்

இலங்கைக்கு நட்பு ரீதியான உதவிகளை  வழங்குவதற்காக ஜப்பான் அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளுக்கென்று நூறுக்கோடி யென்  நிதி உதவியை வழங்க ஜப்பான் அரசாங்கம்  இணக்கம் தெரிவித்துள்ளது.

 

ஜப்பான் வரலாற்று நகரமான கியோதோ நகரத்தின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாத்து நவீன மயப்படுத்தியதுபோன்று வரலாற்று சிறப்புமிக்க கண்டி பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்  ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் பேராசிரியர்  ஹரொதொ ஹசுமிக்கும் இடையிலான  கலநதுரையாடலொன்று  நேற்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில்  இடம்பெற்றது.

இலங்கைக்கு நட்பு ரீதியான உதவிகளை  வழங்குவதற்காக ஜப்பான் அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளுக்கென நூறுக்கோடி யென்  நிதி உதவியை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும்  ஹரொதொ ஹசுமி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சமூக, பொருளதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பிலும், இந்து சமுத்திரத்தில் கப்பல் போக்குவாரத்தின் சதந்திரம் மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுவது தொடர்பிலும்  இருதரப்புக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.