கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த என்னால் முடியும் – ஞானசாரர்

நாட்களில் தரமுயர்த்த என்னால் முடியுமென பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

எனினும் விளைவுகள் மோசமாக இருக்குமென்பதால், ஒரு மாதம் அவகாசம் தாருங்கள் தீர்வை பெற்றுத்தருவேன் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி மதத்தலைவர்களினால் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முற்பகல் போராட்டக்களத்திற்குச் சென்ற பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அத்தோடு போராட்டத்தையும் தற்காலிகமாக கைவிடும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் அங்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “ 5 நாட்களில் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த என்னால் முடியும். ஆனால் விளைவுகள் மோசமாக இருக்கும். நிதானமாக இந்த நடவடிக்கையை செயற்படுத்த எனக்கு ஒரு மாதம் அவகாசம் தாருங்கள். அதற்குள் இதனை செய்து தருவேன்.

பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எங்களினால் அந்த பேச்சுவார்த்தை ஆரோக்கியமாக முற்றுபெரும் என நம்புகிறேன்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். எனவேதான் எமது அரசியல்வாதிகளின் இருவேடங்களை களைந்து நாம் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவோம். ஒரே நாட்டின் தாய் பிள்ளைகளைப்போல நாம் செயற்பட முன்வர வேண்டும்.

விரைவில் இந்த பிரச்சினையை முடித்து பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.