3 மாதத்தில் தரமுயர்த்தும் வாக்குறுதியை கிழித்தெறிந்த போராட்டக்காரர்கள்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி கல்முனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து வருகிறது. 3 மாதத்தில் கல்முனையை தரமுயர்த்துவதாக ஐ.தே.க, த.தே.கூ பிரமுகர்கள் இன்று வழங்கிய கடிதத்தையும் போராட்டக்காரர்கள் கிழித்தெறிந்தனர்.
இன்று கல்முனைக்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா கமகே, கூட்டமைப்பு எம்.பிக்கள் எம்.ஏ.சுமந்திரன், க.கோடீஸ்வரன் ஆகியோர், அரசு 3 மாதத்தில் கல்முனையை தரமுயர்த்தும் என்ற வாக்குறுதியை எழுத்துமூலமாக வழங்கி வாசித்து காண்பித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரமுகர்கள் மீது தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டது.
அத்துடன் அவர்கள் வழங்கிய எழுத்துமூல வாக்குறுதியையும் போராட்டக்காரர்கள் கிழித்து எறிந்தனர். போராட்டம் தொடர்ந்து வருகிறது.