யோகா கலையில் ஈடுபட்ட மைத்திரிக்கு நன்றி தெரிவித்த மோடி

யோகா கலையை வளர்ப்பதற்கு உதவுகின்றமைக்காக  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி  நன்றி தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் யோகாப்பயிற்சி  செய்யும் வீடியோவை இன்று வெளியிட்டார். அதில் யோகாவின் முக்கியத்துவம் குறித்து அவரது உரை அதில் அடங்கியிருந்தது.

யோகாவை  மேலும்  பிரபல்யபடுத்துவதற்காக  நீங்கள்  தரும்  ஆதரவுக்கு  நன்றி . உங்களது   இந்த  யோகாபயிற்சி  அனுபவத்தை பகிர்ந்து கொண்டதைக்காணும்  போது  மகிழ்ச்சியாக  இருக்கிறது என்று பிரதமர்  மோடி தனது டுவிட்டர்  சமூக ஊடகத்தில்  பதிவு செய்திருக்கிறார்.