மயானத்தில் சடலத்தை போட்டுவிட்டு ஓடிய உறவினா்கள்..!

இறந்தவாின் சடலத்தை நல்லடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு சென்றபோது குளவி தாக்குதலுக்குள்ளான உறவினா்கள் இறந்தவாின் சடலத்தை விட்டு தப்பி ஓடியிருக்கின்றனர்

வட்டவளை பகுதியில் நேற்று முன்தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் மூவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து அனாதையாக விட்டுச் செல்லப்பட்ட சவப்பெட்டியை இருட்டோடு இருட்டாக வந்த அந்த தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் புதைத்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர்ந்த நபரொருவரின்
இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டிக்கு முன்பாக சென்றுகொண்டிருந்தவர்கள் பட்டாசு கொளுத்தி வீசியுள்ளனர். அந்த சத்தத்தில் கலைந்த குளவிகள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை விரட்டி விரட்டி கொட்டியுள்ளது
என தெரிவிக்கப்பட்டுள்ளது.