மக்களால் அடித்து விரட்டப்பட்ட கல்முனை பிரதி மேயர்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயா்த்தக்கோாி சா்வமத தலைவா்கள் உணவு தவிா்ப்பு போராட்டத்தை நடத்திவரும் நிலையில் அங்கு குழப்பம் செய்யும் முயற்சியில் இறங்கிவரை பொதுமக்கள் அடித்து விரட்டியுள்ளனா்.உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு சென்ற கல்முனை பிரதி மேயர் காத்த முத்து கணேஷ் அடித்து கலைக்கப்பட்டார். குறித்த போராட்டம் இன்றுடன் ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அங்கு சென்று போராட்டத்தினை குழப்ப முற்பட்ட நிலையில் அவர் அங்கிருந்த மக்களால் இவ்வாறு அடித்து கலைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் குறித்த போராட்ட இடத்திற்கு விரைந்துள்ளமை குறிப்பிடத்த க்கது.