வடக்கின் பல பாகங்களில் இன்று வியாழக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்.பிரதேசத்தில்:
இன்று காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை யாழ். மண்டைதீவு, அரியாலை பூம்புகார், அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்கும்பான் நீர்ப்பாசனத் திணைக்களம், வென்புரவி நகர், ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.