மக்கள் பணத்தை களவெடுக்க முயற்சித்து மாட்டிய சமுா்தி அதிகாாிகள்..!

சமுா்த்தி பயனாளிகளுக்கான உாித்து பத்திரம் வழங்கும் நிகழ்வுக்கு செலவிடப்பட்ட பணத்தை மக்களிடமிருந்து சுரண்டுவதற்கு முயற்சித்து அது அம்பலப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் அவ்வாறு பணம் அறவிடவில்லை. அது பொய் என அமைச்சரும், சமுா்தி பணிப்பாளரும் பல்ட்டி அடித்திருக்கின்றனா்.
சமுா்தி பயனாளிகளுக்கான உாித்து பத்திரம் வழங்கும் நிகழ்வில் செலவிடப்படும் பணத்தை ஈடுகட்ட பயனாளிகளிடமிருந்து தலா 500 ரூபாய்
அறவிடவேண்டும் எனவும், அதனை மாவட்ட சமுா்த்தி பிாிவுக்கு அனுப்பிவைக்குமாறும் எழுத்துமுலம் வழங்கப்பட்ட உத்தரவு கடிதம் அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் பல்ட்டி அடித்து அமைச்சரும், சமுா்தி பணிப்பாளரும் அவ்வாறு தாங்கள் கூறவில்லை என ஊடகங்களுக்கு கூறி வருகின்றனா்.