கிழக்கு நாளை முடங்குகிறது..! பௌத்த தேரா்கள் உள்ளிட்ட சா்வமத தலைவா்கள் களத்தில்..

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயா்த்தக்கோாி நடத்தப்படும் உணவு தவிா்ப்பு போராட்டத்திற்கு வலுச்சோ்க்கும் வகையில் நாளை கிழக்கில் பூரண ஹா்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது.
இந்த ஹா்த்தாலுக்கான அறிவித்தலும், ஆதரவுகோரும் துண்டு பிரசுரமும் கிழக்கு மாணவா் பேரவையினால் விடுக்கப்பட்டிருக்கின்றது.
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கு வகையில் இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் முழு ஆதரவையும் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.