இராணுவ தளபதியாகும் சவேந்திர சில்வா..! தமிழா்களின் கதை என்ன..?

இராணுவ பிரதானியாக பதவி வகிக்கும் சவேந்திர சில்வாவுக்கு ஜனாதிபதி மைத்திாிபால சிசேனா மேலும் 6 மாதங்கள் கால நீடிப்பு வழங்கியுள்ளாா்.
எதிர்வரும் 21 ஆம் திகதி சவேந்திர சில்வாவுக்கு 55 வயது பூர்த்தி­யாகும் நிலையி லேயே, அவருக்கு எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிவரை
ஜனாதிபதி பதவி நீடிப்பு வழங்கி­யுள்ளார். இந் நிலையில் 6 மாதகால பதவி நீடிப்பு வழங்கியுள்ள ஜனாதி­பதி, சவேந்திர சில்வாவை
எதிர்வரும் ஆகஸ்ட் முதல் நான்கு மாதங்களுக்கு இராணுவத் தளபதி­யாக நியமிக்க தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்­கின்றன.
தற்போதைய இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்­க வுக்கு ஏற்கனவே ஜனாதிபதி வழங்­கியுள்ள சேவை நீடிப்பு எதிர்வரும்
ஆகஸ்ட் 18 ஆம் திகதியுடன் நிறைவடை­கின்றது. அதன் பின்னர் மகேஸ் சேனநா­யக்க ஓய்வுபெறும் நிலையில், இரா­ணுவத்தின் இரண்டாம் நிலையில் உள்ள
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இரா­ணுவ தளபதியாகும் வாய்ப்பு ஏற்பட்­டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வன்னி கட்டளை அதிகாரியாக
செயற்பட்டிருந்த சவேந்திர சில்வா­வுக்கு எதிராக மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்கள் பல சர்வ தேச அமைப்புக்களால்
முன்வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.