அதிகாலையில் கோர விபத்து..! 4 பெண்கள் உட்பட 5 போ் உயிாிழப்பு, 12 போ் படுகாயம்..

பொலனறுவை- மட்டக்களப்பு வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 5 போ் உயிாிழந்துள்ளதுடன், 12 போ் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா்.
மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் வெலிகந்த பகுதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வான் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பெலியத்த பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 29 – 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர். திம்புலாகல, மிஹிது பெரஹராவை பார்வையிட சென்று மீண்டும் வீடு திரும்பியவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிக வேகமும், வான் சாரதியின் கவனயீனமுமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.