வாகனத்தையும், வீட்டையும் சம்மந்தன் கொண்டுபோய்விட்டாா்..! நாடாளுமன்றில் கூட்டமைப்பின் சீலையை உாிந்த மஹிந்த..

எதிா்கட்சி தலைவருக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தையும் வீட்டையும் சம்மந்தன் கொண்டுபோய்விட்டாா். என எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியிருக்கின்றாா்.
இதன் காரணமாகவேதான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார். இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களுக்கும்
வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில்
இது குறித்து கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். எதிர்க்கட்சி தலைவருக்கான வீடு, வாகனம் என்பவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீண்டும் கையளிக்கவில்லை.
இந்நிலையிலேயே தான் குறித்த கோரிக்கையை விடுத்ததாக தெரிவித்தார்.
Be the first of your friends to like this Jaffnazone . com
2. 5K likes Like Page ஆசிரியர் – Editor செவ்வாய், 18 ஜூன் 2019 04:15 PM
பிரதா… இலங்கை…