மனோகணேசனுக்கு நன்றி சொன்ன சீ.வி……

..
திருகோணமலை கன்னியா வென்னீரூற்று பிள்ளையாா் ஆலயம் மற்றும் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையாா் ஆலய விவகாரங்களில் தலையிட்டமைக்காக அமைச்சா் மனோகணேசனுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஷ்வரன் நன்றி கூறியுள்ளாா்.
எனது நண்பரும், ஜனாதிபதி சட்டத்தர­ணியுமான கனக ஈஸ்வரன் இவ் விவகா­ரங்கள் தொடர்பில் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட உள்ள­தாக எனக்கு தெரிவித்துள்ளார். அர­சியல் நடவடிக்கைக ளுக்கு மேலதிக­மாக,
இந்த வழக்குக்கு சத்திய வாக்குமூலம் தர நீங்கள் தயாராக இருப்பதா கவும், அவர் மூலம் நான் அறிந்தேன்.இதற்காக மீண்டும் என் நன்றியை தெரிவித்துக்­கொள்கிறேன் என்று முன்னாள் வடமா­காண சபை முதல் வரும், தமிழ் மக்கள் கூட்டணி செயலாளருமான
சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் முற்­போக்கு கூட்டணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலு வல்கள் அமைச்சருமான மனோ கணேச­னுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
இதுபற்றி அமைச்சர் மனோ கணேச­னிடம் வினவியபோது, விக்னேஸ் வரன் இதுபற்றி தன்னிடம் நேரடியாக உரையாடியதாகவும் கூறினார். மேலும் திருகோணமலை மாவட்ட கன்­னியா வெந்நீர் ஊற்று பிள் ளையார், முல்லைத்தீவு மாவட்ட நீராவியடி பிள்­ளையார் ஆலய
விவகாரங்கள் இன்னமும் முழுமை­யான முடிவுகளை எட்டவில்லை. தொல்பொருள் திணைக்களத்திடமி­ருந்து சில ஆவணங்களை தான் கோரி இருப்பதாகவும் அவை இவ்வாரம் தனக்கு கிடைக்கும் என்றும், அதைய­டுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தான்
முன்னெடுக்க உள்ளதாகவும், இக்கோவில்களை மீளக்கட்டுவிக்க தனது அமைச்சு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.