திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி..!

 தீப்பிடித்த முச்சக்கர வண்டிக்குள்ளிருந்து பாய்ந்து தப்பிய பயணிகள்..
கிழக்கு மாகாணம் பொிய புல்லுமலை பகுதியில் பயணிகள் முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எாிந்துள்ளது.
இந்தச் சம்பவம் பெரிய புல்லுமலை -வெலிக்காகண்டி குளக்கட்டுக்கு அருகில் நடந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை இறக்கி விட்டு, அடுத்த பக்கமாக திருப்பும் போது திடீரென முச்சக்கர வண்டி தீப்பற்றியுள்ளது.
சாரதி உடனடியாக பாய்ந்து வெளியேறியதால் உயிர் தப்பினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.