தமிழர் நிலத்தில் விகாரை கட்டுவதை நிறுத்துங்கள்- மனோ

பௌத்தர்களே இல்லாத ஊரில்
காணி பிடித்து விகாரை கட்டுவதை
நிறுத்தவேண்டும்.

இதனை நான் அத்துரலிய ரத்தின
தேரரிடம் நான் கூறுவேன். என அமைச்சர்
மனோகணேசன் தனது உத்தியோகபூர்வ
பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கின்றார்.
அதில் மேலும் அவர்
குறிப்பிட்டிருப்பதாவது, இந்து-பௌத்த
ஐக்கியம் நல்லதே. ஆனால் அதற்கு
நிபந்தனைகளாக, “சி/பௌ ஆளில்லாத
ஊரில்” காணி பிடித்து விகாரை
கட்டுவதையும்,
தொல்பொருளாராய்ச்சியில் பௌத்த
சிதைவுகளை வடகிழக்கில் தேடும் போது
“தமிழ் பௌத்த” வரலாற்றை மறந்து
விடுவதையும் நிறுத்த வேண்டும்
என இரத்தின தேரரிடம் நான் இன்னும்
சில தினங்களில் சொல்வேன். இந்த
அடிப்படையில் அவருடன்
கலந்துரையாடுவேன். அவர் என்
நண்பர்தான்.

மூன்று வருடங்களாக சபையில் என்
பக்கத்து ஆசனத்தில்தான் அவர் இருந்தார்.