காரசாரமா இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இணை தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இரண்டு நிமிட இறைவணக்கத்துடன் இடம்பெற்றது. இதில் பல விடயங்கள் ஆராயப்பட்டன முதலாவதாக  கம்பிரலியா வேலைத்திட்டத்தின் கீழ் ரூபா95.8 மில்லியன் பெறுமதியான 101 வேலைத்திட்டங்களுக்கான அனுமதியை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு விடமிருந்து பிரதேச செயலாளர் கனகேஸ்வரன் அதற்கான கோரியிருந்தார். அதற்க்கான அனுமதியை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைப்பு குழு இணை தலைவர்களுமான எம்.ஏ சுமந்திரன் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் சபையில் ஒப்பமிட்டு வழங்கினார் தொடர்ந்து வீதி அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டது முதலாவதாக வீதி அபிவிருத்தி தொடர்பில் பருத்தித்துறை வெற்றிலைக்கேணி வீதியில் அம்பனிலிருந்து மருதங்கேணி சந்திவரை செய்யப்படுகின்ற வேலைகள் மூன்று வருடங்களை கடந்தும் நிறைவேற்றப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் வீதி அபிவிருத்திஅதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றுடன் கேள்விகளை எழுப்பினார் அதற்கு பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் ஒப்பந்தகாரர்கள் உரிய காலத்தில் குறித்த வேலைகளை மேற்கொள்ளவில்லை என்றும் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் வேலைகள் பூர்த்தியாகும் என்றும் தெரிவித்தார்.பருத்தித்துறையில் இருந்து மருதங்கேணி வரையான 32 கிலோமீட்டர் வீதியை புனரமைப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த நிலையிலும் அம்பனிலிருந்து மருதங்கேணி சந்தி வரை சுமார் 16 கிலோ மீட்டர் வரையே புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய பருத்தித்துறையில் இருந்து அம்பன் வரையான இடைவெளி திருத்தப்படவில்லை என்றும் சுமந்திரன் இங்கே மேலும் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியன அவை யாழ்ப்பாணம் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான வீதி என்றும் அது தொடர்பில் தம்மால் பதிலளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்கள் இதேவேளை வடமராட்சி கிழக்கின் கரையோர வீதியான நாகர்கோவிலில் இருந்து சுண்டிக்குளம் வீதியில் நாகர்கோவிலிலிருந்து மாமுனை வரை சுமார் 8 கிலோமீட்டர் வீதியை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வீதி வரைபடத்தில் இருந்து நீக்கியுள்ளதாக நாகர்கோவில் வட்டார பிரதேச சபை உறுப்பினர் அ.சுரேஷ்குமார் குற்றம்சாட்டினார்.அதற்கு பதிலளித்த வீதி அபிவிருத்திதிணைக்கள அதிகாரி தமது வரைபடத்தில் உள்ளபடியே தம்மால் செயற்படுத்த முடியுமென்று தெரிவித்தார் அதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் உடனடியாக நாகர்கோவிலில் இருந்து மாமுனைவரையான 8 கிலோமீட்டர் வீதி வரை படத்தை கரையோர வீதி வரைபடத்தில் சேர்த்துக் கொள்ளுமாறும் ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர்கள் கட்டளையிட்டனர். இதேவேளை வடமராட்சி கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இண்டு வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டும் சுகாதார வைத்திய அதிகாரி நியமிக்கப்பட்டும் அதற்குரிய பணியாளர் தொகுதி நியமிக்கப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டப்பட்டது.இதற்கு சபை உரிய மேலதிகாரிகளுக்கும் அமைச்சுக்கும் குறித்த விடயம் தொடர்பாக கடிதம் அனுப்புவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. கல்வி விடயம் தொடர்பாக ஆராயப்பட்ட போது வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பொதுத்த தாராதர உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் உறுதியளிக்கப்பட்டுருந்த போதும் அது தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கட்டைக்காடு கிராம மக்கள் சுட்டிக்காட்டினார் இதற்கு பதிலளித்த கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வகுப்புக்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட இருப்பதனால் உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் தாம் மிக விரைவில் அதற்குரிய முடிவை எடுத்து க.பொ.த உயர்தர வகுப்பு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார் விவசாயம் தொடர்பாக அங்கு விவாதிக்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு அம்பன் கமநல சேவை நிலையத்தின் பல்வேறு ஊழல்கள் சபையில் வெளிப்படுத்தப்பட்டன குறிப்பாக விவசாய வேலி அடைப்பு தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான ஆவணங்கள் ஆதாரபூர்வமாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான ஆவணங்களை இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் விஜயகலா ஆகியோருக்கு கையளிக்கப்பட்டது. வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் விவசாய காணிகள் திருத்தும் பணியில் பிரதேச செயலக உயர் தர அதிகாரி ஒருவர் தனது நெருங்கிய உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் குடும்பத்திற்கும் அந்த பணத்தினை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரங்களும்உங்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.இருந்தும் அம்பன் கமநல சேவை நிலைய அதிகாரி முழுமையாக மறுத்து கருத்துக்களை தெரிவித்திருந்தார் தொடர்ந்து கடற்தொழில் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் கருத்து தெரிவித்த கடற் தொழிலாளி காத்தலிங்கம் அண்ணாமலை முல்லைத்தீவு போன்ற யுத்தத்தால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீனவர்கள் தமது சங்கங்கள் சமாசங்களூடாக மாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கு மீன் ஏற்றுமதி செய்வதாகவும் ஆனால் வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் வழங்கப்பட்ட. இரண்டு கூலர் வாகனங்களையும் கட்டையில் ஏற்றப்பட்டு விடப்பட்டுள்ளதாகவும் பனிக் கட்டி தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளதாகவும் இங்கு குற்றம் சுமத்தினார் இதற்கான நடவடிக்கைகள் வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் பொறுப்பற்ற செயல் என்றும் இங்கு கடுமையாக விமர்சித்திருந்தார். தொடர்ந்து வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வீட்டுத்திட்டம் வழங்குவதில் பல்வேறு முறைகளில் இடம்பெற்றிருப்பதாக சபையில் வந்திருந்தவர்கள்  குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். திருமண பதிவு இல்லாத ஒரு சிலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவைமுறைகேடான ஊழல் என்றும் பாதிக்கப்பட்டவர் அங்கு நேரில் சமூகமளித்து தமது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்கள் . கட்டைக் காட்டிலிருந்து தாளையடி வரையில் வீதிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் பகுதி திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டதாகவும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் சபையில் தெரிவிக்கப்பட்டபோது பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அங்கு அவ்வாறான வேலை எதுவும் நடைபெறவில்லை என்றும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள் இதேவேளை வன ஜீவராசி திணைக்களத்தால் நாகர்கோவில் விளையாட்டு மைதான புனரமைப்பிற்க்கு களி மண் அகழ்விற்கு உரிமம் வழங்கப்பட்டும் களி மண் அகழ்வில் ஈடுபட்ட நாகர்கோவில் மக்களை களி மண் அகழவிடாது வனஜீவராசிகள் திணைக்களம் தடுத்து நிறுத்தியதனூடாக தமது செயலக அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்தாக சபையிலவ சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.இதே வேளை வன ஜீவராசிகள் திணைக்களம் சுவீகரித்த தேசிய பூங்கா காணிகளை விடுவிக்குமாறு பிரதமர் கமுரிய அமைச்சுக்கு கட்டளையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் உரிய அமைச்சு நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் எம் ஏ சுமந்திரன் குறிப்பிட்டார். இவ்வாறான பல ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 4 மணி 15 நிமிடம் அளவில் கூட்டம் இனிதே நிறைவுற்றது.பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ச.சுகிர்தன் கேசவன் சயந்தன் ஆகியோரும் பல்வேறு திணைக்களங்களின் தலைவர்களும் பிரதேச பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம சேவகர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர் உட்பட சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது