இருக்கும் குளங்களை கூட பாதுகாக்க வக்கற்ற யாழ்.மாநகரசபை..!

யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட நல்லுாா் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள பிராமணக்கட்டு குளம் தொடா்பாக யாழ்.மாநகரசபை கவனம் செலுத்தவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
குறித்த குளத்தில் பெருமளவு குப்பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் சுமாா் 12400 கனமீற்றா் நீரை கொள்ள கூடிய குறித்த குளம் அழிந்துபோகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.
இது குறித்து அறிந்தும் யாழ்.மாநகரசபை இந்த விடயத்தில் அக்கறையற்றிருப்பதாக கூறும் மக்கள் குளத்தை பாதுகாக்க இனிமேலாவது மாநகரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுள்ளனா்.