இன்றைய ராசி பலன் (17/4/2019) திங்கட் கிழமை

வருஷம் சித்திரை மாதம் 4ம் தேதி புதன்கிழமை திரியோதசி திதி. உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி அமிர்த யோகம் சுப முகூர்த்த நாள்.
மேஷ ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 6-ல் சந்திரன் இருப்பதால் 5ம் அதிபதி சூரியனின் சாரம் பெற்று இருப்பதால் எதிலும் தைரியமாக செயல்படுவதும் ஆனால் நிதானமாகச் செயல்பட வேண்டும் முன் கோபப்பட வேண்டாம்புதிய சொத்துக்கள் பற்றி பேசுவதும் திருமண யோகமும் குழந்தைச் செல்வமும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்றைய மேஷ ராசிக்கு தைரியமான நாள்.
ரிஷப ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 5ல் சந்திரன் இருப்பதால் 4ம் அதிபதி சூரியனுடன் சாரம் பெற்று நிற்பதால் பூர்வீக சொத்துக்கள் பற்றி பேசுவதும், வீடு வாகன சேர்க்கை யோகமும், தொழில் துறையில் அதிக லாபமும் உண்டாகும். ஆனால் யாருக்கும் வாக்கு தருவதில் கவனம் தேவை. திருமண யோகம், குழந்தைச் செல்வம் உண்டாகும். இன்றைய ரிஷப ராசிக்கு யோகமான நாள்.
மிதுன ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 4ல் சந்திரன் இருப்பதால் 3ம் அதிபதி சூரியனின் சாரம் பெற்று நிற்பதால் வீடு வாகன சேர்க்கை யோகமும் எந்த முயற்சியிலும் வெற்றி காண்பதும், ஆனால் தனக்கு தானே தாழ்வு மனப்பான்மை வேண்டாம். நகைச்சுவை உணர்வுடன் இருப்பது நன்று.வேலை வாய்ப்பில் பதவி உயர்வதும் இருக்கும். இன்றைய மிதுன ராசிக்கு யோகமான நாள்.
கடக ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 3ல் சந்திரன் இருப்பதால் 2ம் அதிபதி சூரியன் சாரம் பெற்று நிற்பதால் எந்த முயற்சியிலும் வெற்றி காண்பதும், ஆனால் நிதானமாக செயல்பட வேண்டும். வீட்டில் தனச் சேர்க்கை யோகமும், ஆனால் வரும் யோகத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம், திருமண யோகமும் உண்டாகும். இன்றைய கடக ராசிக்கு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள்.
சிம்ம ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 2ல் சந்திரன் இருப்பதால் லக்னாதிபதி சூரியனுடைய சாரம் பெற்று இருப்பதால் எண்ணமும் செயலும் சிறப்பாக செயல்படுவதும், வீட்டில் தன சேர்க்கை யோகமும், ஆனால் இருக்கும் செல்வத்தை யாரிடமும் கடன் உதவி செய்ய வாக்குத்தர வேண்டாம். எதிலும் வெற்றியடைவதும், திருமண யோகம் உண்டாகும். இன்றைய சிம்ம ராசிக்கு யோகமான நாள்.
கன்னி ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு லக்னத்தில் சந்திரன் இருப்பதால்12-ம் அதிபதி சூரியன் சாரம் பெற்று நிற்பதால், விதியை மதியால் வெல்வதும், சுகபோக வாழ்க்கையில் ஆனால் டென்ஷன் ஆக வேண்டாம். நகைச்சுவை உடன் இருப்பது நன்று. திருமண யோகமும் இன்றைய கன்னி ராசிக்கு யோகமான நாள்.
துலா ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 12ல் சந்திரன் இருப்பதால் 11ம் அதிபதி சூரியன் சாரம் பெற்று நிற்பதால் சுகபோக வாழ்க்கையில் தொழிலில் அதிக லாபமும், ஆனால் வீட்டில் உள்ள செல்வத்தை யாரிடமும் கடனாகவோ வாங்கியும் தர வேண்டாம். தான தர்மம் செய்யலாம். இன்றைய துலா ராசிக்கு யோகமான நாள்.
விருச்சிக ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 11ல் சந்திரன் இருப்பதால்10-ம் அதிபதி சூரியனின் சாரம் பெற்று நிற்பதால் தொழில் துறையில் அதிக லாபமும், ஆனால் வரும் லாபத்தை யாருக்கும் கடனாகத்தர வேண்டாம். சாதுவாக இருக்க வேண்டும். அலுவலகத்திலும் வேலை வாய்ப்பிலும் பதவி உயர்வதும் இன்றைய விருச்சிக ராசிக்கு லாபகரமான நாள்.
தனுசு ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 10ல் சந்திரன் இருப்பதால் 9ம் அதிபதி சூரியன் சாரம் பெற்று நிற்பதால் வேலை வாய்ப்பில் பதவி உயர்வதும், ஆனால் வரும் உயர்வை அமைதியாக இருந்து வாங்க வேண்டும். வீட்டில் அஷ்ட லட்சுமி கடாட்ச யோகமும், திருமண யோகமும் இன்றைய தனுசு ராசிக்கு உயர்வான நாள்.
மகர ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 9ல் சந்திரன் இருப்பதால் 8ம் அதிபதி சூரியன் சாரம் பெற்று நிற்பதால் வீட்டில் அஷ்ட லட்சுமி கடாட்ச யோகமும் ஆனால் இருக்கும் செல்வத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம். எதிலும் வெற்றியடைவதும், திருமண யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்றைய மகர ராசி யோகமான நாள்.
கும்ப ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 8ல் சந்திரன் இருப்பதால் 7ம் அதிபதி சூரியன் சாரம் பெற்று நிற்பதால் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வீட்டிலும் அலுவலகத்திலும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். யாரிடமும் நேர்மை நாயத்தை பேச வேண்டாம். எதிலும் நிதானமாகச் செயல்பட வேண்டும், வாகனத்தில் கவனமாகவும், மெதுவாகவும் செல்ல வேண்டும். இன்றைய கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கடவுளை தியானித்து வருவது மிக நன்று.
அன்பர்களே உங்கள் ராசிக்கு 7ல் சந்திரன் இருப்பதால் 6ம் அதிபதி சூரியன் சாரம் பெற்று நிற்பதால் திருமண யோகமும் எதிலும் வெற்றி அடைவதும் ஆனால் யாருக்கும் வாக்கு தருவதில் கவனம் தேவை.பொது நலன்களை பார்ப்பதும் வீடு வாகன சேர்க்கை யோகமும் இன்றைய மீன ராசிக்கு யோகமான நாள்.