அச்சுவேலி – மூளாய் சிற்றூர்திச் சேவை ஆரம்பம்

குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும் வலிகாம்ம் வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான பொ.தங்கராசா அவர்கள், அச்சுவேலியில் இருந்து மூளாய்க்கு வசாவிளான் – கட்டுவன் பாதை தடை செய்யப்பட்டிருந்தாலும்.
குரும்பசிட்டி ஊடாக இச் சேவையை நடாத்தக் கூடிய சாத்தியக் கூறு இருப்பதால் இச் சேவையை இடம் பெயர்ந்து மீளக் குடியேறிய மக்களின் போக்குவரத்து வசதிகளுக்காக நடாத்துமாறு, வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தலைவருக்கும், யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் கடித மூலமாகவும், நேரடியாகவும் தொடர்பு கொண்டதன் பயனாக வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினரால் வழங்கப்பட்ட பாதை அனுமதியிடன் 16/06/2019 திகதி அச்சுவேலியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட வெள்ளோட்ட சிற்றூர்தி தொடர் அணி குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தை வந்தடைந்து, அங்கு நடைபெற்ற விசேட பூசை வழிபாட்டினைத் தொடர்ந்து மூளாய் பிரதேசத்திற்கு தொடர்ந்தது.
இச் சேவையினால் தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலை, புற்று நோய் வைத்தியசாலை, யூனியன் கல்லூரி,வலிவடக்கு பிரதேச செயலகம், தூர்க்காதேவி தேவஸ்தானம், மகாஞனாக் கல்லூரி, வலிவடக்கு பிரதேச சபை தலைமைக் கந்தோர் ஆகிய இடங்களுக்கு குறுகிய நேரத்திலும், குறைந்த கட்டணச் செலவுடனும் மக்களால் பயனிக்க முடியும் என கருத்துக்கள் பரிமணப்பட்டன.