நாளைமறுதினம் அமைச்சரவை நிச்சயமாக கூடும் – ரவி கருணாநாயக்க

அமைச்சரவை கூட்டங்களை முன்னெடுப்பதில்  எந்த சிக்கலும் கிடையாது. இந்த வாரத்துக்கான  அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் நிச்சயமாக நாளைமறுதினம் கூடும்  என  அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

 

பிணைமுறி விவகாரத்தில் என் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக என் மீதுள்ள நியாயத்தை நான் வெளிப்படுத்தியுள்ளேன். இது எனது கட்சியில் உள்ள சிலருக்கு பதிலடியாக அமையும் எனவும் மின்சாரசபையை விழ்ச்சியடைய செய்து தனியார் இலாபத்தை பெற்றுக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால்  ஒருக்காலமும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு நாங்கள் இடமளிக்க போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.