சிறந்த ஆரம்ப இணைப்பாட்டம் – வலுவான நிலையில் இந்தியா!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

உலகக் கிண்ணத் தொடரின் 22ஆவது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கியுள்ள இந்திய அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடி பலமான நிலையில் உள்ளது.

காயமடைந்த தவானுக்கு பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கியுள்ள ராகுல் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகின்றார்.

தற்போது வரை 21 ஓவர்கள் நிறைவில் விக்கட் இழப்பின்றி 113 ஓட்டங்களை பெற்று இந்தியா வலுவான நிலையில் உள்ளது.

ஆடுகளத்தில் ரோகித் சர்மா 67 ஓட்டங்களுடனும், ராகுல் 43 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.