வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை!

ரத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படகொலை செய்யப்பட்டமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது குறித்த பகுதிக்கு பொறுப்பான அதிகாரியாக ரவி விஜேகுணவர்தன கடமையாற்றியிருந்தார்.
இந்நிலையில் குறித்த கொலைகள் குறித்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி அறிந்திருந்தார் என்பது பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை ரவி விஜேகுணவர்தன தற்பொழுது வட மாகாண பிராந்தியப் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.