மோடிக்கு கிர்கிஸ்தான் ஜனாதிபதியும் குடைபிடித்தார்!

ஷாங்ஹாய் ஒத்துழைப்பு மாநாட்டுக்குச் சென்ற இந்தியப் பிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தான் ஜனாதிபதி Sooronbay Jeenbekov குடை பிடித்த நிகழ்வு நடந்துள்ளது. ஏற்கனவே, இலங்கை வந்த பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி மைத்ரி குடைபிடித்தமை குறிப்பிடத்தக்கது.

ஷாங்ஹாய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றார். அங்கு அவரை கிர்கிஸ்தான் ஜனாதிபதி Sooronbay Jeenbekov வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது திடீரென மழை தூறவே, பாதுகாப்பு அதிகாரிகள் குடை பிடித்திருக்க வேண்டும். ஆனால், மரபை புறந்தள்ளி அந்நாட்டு ஜனாதிபதி , பிரதமர் மோடிக்கு குடைபிடித்தார்.