மீனவர்கள் கூட்டத்தை புறக்கணித்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்

நிலையான மீன்பிடி கைத்தொழில் தொடர்பாக கொள்கை வகுப்பாளர்கள் பாரளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரதிநிதிகள் பொறுப்புமிக்கவர்கள் மற்றும்  மீன்பிடி சமூகத்துக்கிடையிலான வட்டமேசை கலந்துரையாடல் நேற்று யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் திரு ஆலம் தலமையில் நேற்று காலை 10:30 மணிக்கு ஆரம்பமானது தேசிய  மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆனுசரணையில் இடம் பெற்ற இந்த வட்ட மேசை மாநாட்டிற்க்கு தமிழ் தமிழ்தேசிய கூட்டமைப்பின்  பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களுக்கும்  அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்புக்கள் அனுப்பப்பட்டும்   பாராாளுமன்ற உறுப்பினர்கள்  அல்லது அவர்கள் சார்பான பிரதி நிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை  எனினும் முன்னாள் வடமாகாண மகளிர் அமைச்சர்.அனந்தி சசிதரன் மற்றும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கருத்துக்களை மன்னார் கிளி  முல்லைத்தீவு யாழ்ப்பாணம் ஆகி்ய மாவட்டங்களை பிரதிநிதிப்படுத்திய மீனவ  பிரதிநிதிகள் வடமாகாண கடற்றொழிலாளர் இணைய  செயலாளர் சுப்பிரமணியம் உப தலைவர் பிரன்சிஸ் நான்கு  மாவட்டங்களின் சாமசங்களின் பிரதிநிதிகள் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் இணைய செயலாளர் அன்னராசா யாழ் மாவட்ட மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தலைவர் முரளீதரன் தேசிய மீனவ ஒத்துளைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் மகளிர்திட்ட இணைப்பாளர் லவினா மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குறுஸ் யாழ்மாவட்ட இணைப்பாளர் இன்பநாயகம் NAFSO  ஆகியோர் வழங்கியிருந்தனர்.

இங்கு கருத்துக்களை தெரிவித்த அனைவரும் தென்னிலங்கை மீனவர்களின் பாதிப்பு ரோளர் படகுகளாலான பாதிப்பு சுருக்கு வலை பாதிப்பு காற்றாலை அமைப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்தனர் மேலும் வடமாகாம மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பில் அவர்களால் ஒரு ஆவணமும் வெளியீடு செய்யப்பட்டது.மேலும் நேற்றைய கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக் பாராளுமன்றத்தில் தமதி பிரச்சினைகளை பேசி அவற்றை ஒரு சட்டமாக்க நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஏற்பாடு செயவயப்பபட்தாகவும் ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளாமை மீனவர்களின் பிரச்சினையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கறை கொள்ளாமையை காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.நேற்றைய கலந்துலரையாடலில் கிளி முல்லை யாழ் மன்னார் மாவட்ட மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் முன்னாள் மாகாண மகலகிர் அமைச்சர் அனந்து சசிதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொது செயலர் செ.கஜேந்திரன் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் இ.முரளீதரன் உட்பட நூறு பேர் வரை கலந்து கொண்டனர்