சீயோன் தேவாலயத்தின் தற்கொலை குண்டுதாரியின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் பொலிசார்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் வெடிப்பு சம்பவத்தின் தற்கொலை குண்டுதாரியின் உடலை அடக்கம் செய்வதில் பாரிய இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடியை சேர்ந்த இவரின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் உள்ள மயானத்தில் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியமையினை அறிந்த மாநகர சபை உறுப்பினர்களும் அப்பகுதி மக்களும் இணைந்து இன்று எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.