102 போிடம் தீவிர விசாரணை தொடா்கிறது..!

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் தொடா்புடைய 102 போ் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளா் கூறியுள்ளாா்.
குறித்த தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் சுமார் 250 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 300 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.
இதையடுத்து தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பில் நாடளவிய ரீதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்ட 102 பேர் மீது தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த 102 பேரில் 77 பேரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தடுத்த வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மிகுதி 25 பேரை
பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.