பேருந்துக்காக காத்திருந்த மாணவா்களை மோதி தள்ளிய கன்டா் வாகனம்..!

முல்லைத்தீவு- மாங்குளம் வீதியில் முள்ளியவளை பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த மாணவா்களை சிறிய ரக கன்டா் வாகனம் மோதி தள்ளியுள்ளது.
இந்த விபத்தில் விபத்தில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் முள்ளியவளை செங்குந்த வீதி சந்தியில் நடந்துள்ளது.
விபத்து தொடர்பில் முள்ளியவளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.