இந்துக்களுக்கும்- பௌத்தா்களுக்கும் என்ன பிரச்சினை..? ஆராய்வதகே வந்தாரம் ரத்தின தேரா்..

வடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில் நிலவும் பிரச்சினைகள் தொடா்பாக ஆராய்வதற்காகவே தாங்கள் வடகிழக்குக்கு விஜயம் செய்துள்ளதாக அத்துரலிய ரத்தின தேரா் கூறியிருக்கின்றாா்.
வவுனியாவில் இந்து மத குருமார்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.நாட்டில் அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும்
பௌத்த, இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் பிரச்சினைகளை ஒரு புறம் வைத்து முதலில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்தை மனதில் கொண்டு பௌத்த, இந்து மக்கள் பிரிவினையுடன் செயற்படக் கூடாது என்றும் வடக்கு மற்றும் கிழக்கில் சில இடங்களில் இவ்விரு மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில்
ஆராய்வதற்காகவே தாம் வவுனியாவிற்கு பயணம்செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.தற்போது நாட்டில் இந்து, பௌத்த மக்கள் மத்தியிலும் சில பிரதேசங்களில் ஒற்றுமையின்மை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்தில்
இந்து – பௌத்த மக்களின் ஒற்றுமை நாட்டுக்கு அவசியமாகியுள்ளது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.