ஆவா குழு ரவுடிகளுடன் பேச்சுவாா்த்தை நடாத்த தான் தயாராம்..! கூறுவது வடக்கு ஆளுநா்..

ஆவா குழுவுடன் எந்தவொரு சந்தா்ப்பத்திலும் பேச்சுவாா்த்தை நடாத்துவதற்கு தயாராக இருப்பதாக வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளாா்.
இன்றைய தினம் பகிரங்கமாக இந்த அழைப்பினை ஆளுநர் விடுத்துள்ளார். ஆவா குழுவிற்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால்
அல்லது தீர்வுத் திட்டங்கள் தேவைப்பட்டால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்றி எந்தவொரு இடத்திற்கும் வந்து
பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது
தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் ஆவா குழுவிற்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மக்கள் பீதியில் இருந்தால் அவர்களின் சார்பில் தாம் குரல் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆவா குழுவின் நோக்கங்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், அவர்களுக்கு இந்த அழைப்பு ஓர் நல்ல சந்தர்ப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு சந்தேகமும் இன்றி குறித்த குழுவினரை சந்திக்க தாம் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.