வடக்கு மீனவர்கள் பல்வேறு வகையிலும் பாதிப்பு நிவாரணம் வழங்க அரசை கோருகிறது

 

வடக்கு மீனவர்களுக்கு தற்போது பல மாதங்களாக மீன்பிடியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதில் பல்வெறு கஸ்டங்களை எதிர் நோக்குவதாகவும் வரட்சி மற்றும் வெள்ள பாதிப்புக்கள் ஏற்படுகின்றபோது விவ சாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாகவும்  தற்போது தென்னிலங்கை மீனவர்களின் ரோளர் தொழில் மற்றும் டைனமெற் ஒளி பாய்ச்சி தொழிலில் ஈடுபடுவதாலும் கடலட்டை   பிடிக்கும் தென்னிலங்கை தொழிலாளர்கள் தமது மீன் பிடிக்கு இடை ஊறாகவும் மீன் உற்பத்தியை ஒழிக்கும் வகையில் தொழிலில் ஈடு பட்டுக் கொண்டிருப்பதாலும் தமது மீன் பிடி தொழில் முற்றிலுமாக பாதிக்கப் பட்டுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பாக முல்லைத்தீவு கிளிநொச்சியின் பூனகரி மற்றும் இரணை தீவு அண்டிய பகுதிகளிலும் முல்லைத்தீவு நாயாறு சாலை பகுதிகளிலும் மன்னாரில் பல இடங்களிலும் இவ்வாறான பாதிப்புக்கள் அதிகம் என்றும் மீனவர்கள் இன்று கவலையுடன் தமது கருத்துக்களை தெரிவித்ததுடன் குறைந்து ஆறு மாத காலத்திற்கு ஏனும் மீனவர்களுக்கு நிவாரணம் வழக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாணத்திற்க்கு உட்பட்ட மீன் பிடி திணைக்களம் பக்க சார்பாக நடந்து கொள்வதாகவும் சட்ட விரோதமான தொழில்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.

வட மாகாண மீனவர் இணைய விசேட கலந்துரையாடல்  13/06/2019  இன்று சிறப்பாக இடம் பெற்றது.வடமாகாண மீனவர் இணைய தலைவர் திரு ஆலம் தலமையில் பிற்பகல் 2:15 மணியளவில் யாழ்ப்பாணம் யாழ் பாடி விருந்தினர் விடுதியில் இரண்டு நிமிட இறை வணக்கத்துடன் ஆரம்பமானது.இந்நிகழ்விலேயே கலந்து கொண்டு கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட மீனவர் இணைய பிரதிநிதிகள் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.இந் நிகழ்வில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஸன் தேசிய மீனவர் இயக்க தலைவர் இர.முரளீதரன் வடமராட்சி கிழக்கி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச பொது முகாமையாளர் உட்பட அறுபதுக்கு மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.