கல்வியமைச்சின் விசேட அறிவிப்பு!

பாடசாலை பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது வரையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் காத்திரமான சூழ்நிலை இருப்பதினால் பாடசாலை பாதுகாப்புக்காக பெற்றோரை தொடர்ந்தும் இணைத்துக் கொள்வதற்கான தேவை இல்லை என்று கல்வி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பாக அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், தொகுதி பொறுப்பு பிரதி மற்றும் உதவி பணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து பாடசாலை தலைமை அதிகாரிகளுக்கு அறிக்கையின் மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.