நாளை யாழில் மின் தடைசெய்யப்படஉள்ள இடங்கள்!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(13)மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.மறவன்புலவு, தனங்கிளப்பு, அறுகுவேலி, நாவற்குழி கேரதீவு வீதி, தச்சன் தோப்பு, கோகிலாக் கண்டி,நீர்வேலி கந்தசுவாமி கோயில் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.