இல்மனைற் அகழ்விற்கு எதிராக வாகரையில் மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு வாகரையில் 48 கிலோமீற்றர் நீளமான கடற்கரையில் சட்டவிரோதமாக இல்மனைற் அகழ வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிராக இன்று மக்கள் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். இல்மனைற் அகழ்வதை நிறுத்துமாறு கோரியே மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். இப்போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் கலந்து கொண்டனர்.
கடற்கரையில் 100 மீற்றர் ஆழத்திற்கு இல்மனைற் அகழப்பட இருப்பதால் கடல்நீர் ஊருக்குள் புகும் அபாயம் இருப்பதாகவும், இதனால் வாகரைப் பிரதேசம் முழுவதும் அழிவடையும் அச்சம் இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தனர்.