அமைச்சரவையை கூட்ட ரணில் அதிரடி செயற்பாடுகளில் இறங்கினார்!

ஈஸ்ரர் தின தாக்குதல்களை விசாரிக்கும் தெரிவுக்குழுவை இரத்துச் செய்யுமாறு கூறி அமைச்சரவையை கூட்ட ஜனாதிபதி மறுத்துவரும் நிலையில் அதற்கெதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகிறார் பிரதமர் ரணில்.

அடுத்த வாரமும் அமைச்சரவை கூட்டப்படாவிட்டால் பாராளுமன்றத்தில் 18 ஆம் திகதி விசேட பிரேரணையொன்றை முன்வைத்துவிட்டு தனக்கிருக்கும் அதிகாரங்களுடன் தற்றுணிவாக அமைச்சரவையை ரணில் கூட்டவுள்ளார்.

பாராளுமன்றத்தில் அனுமதியை கோராமலும் பிரதமர் அமைச்சரவையை கூட்ட அதிகாரம் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் ஒருவர் , இல்லாத அமைச்சருக்கு பதில் அமைச்சரை ஜனாதிபதி நியமிக்கும்போது அமைச்சரவையை கூட்ட பிரதமர் நடவடிக்கை எடுப்பது தவறல்லவென குறிப்பிட்டார்