முப்பது வருடகால யுத்தம் தமிழ் மக்களை சிதைத்து விட்டது!!! சம்மந்தன் கண்டபிடிப்பு

நீண்ட காலமாக தொடரும் தமிழர்களது பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் இதற்காக அனைவரும் ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டில் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகின்றேன்.
கடந்த 30 ஆண்டுகால ஆயுத போராட்டத்தில் தமிழ் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அப்படி ஒரு நிலை மீண்டும் ஏற்படக்கூடாது.
எனவே தற்போது மக்களின் முக்கியமான பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு ஒன்று எட்டப்படவில்லை. அதற்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்ட வேண்டும் என இங்கு கோரிக்கை விடுக்கின்றேன்.
அத்தோடு இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளவும் அனைவரது ஒத்துழைப்பு அவசியம்” என இரா.சம்பந்தன் கூறினார்.