பொய் பிரசாரங்களை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்க‍ை!

பொய் பிரசாரங்களை மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதி அதற்கான புதிய சட்டங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருக்கின்றது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

நாட்டில் கடந்த காலங்களில் இனமோதல்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான குரோதங்கள் ஏற்பட பிரதான காரணமாக இருந்தது பொய் பிரசாரங்களும் இன வைராக்கியத்தை தூண்டும் வகையிலான பேச்சுக்களுமாகும். அதனால் எதிர்காலத்தில் பொய் பிரசாரங்களை மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதி அதற்காக புதிய சட்டங்களை கொண்டுவர இருக்கின்றோம்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக மத வைராக்கியத்தை பரப்புபவர்களுக்கு எதிராக மேற்கொள்ள இருக்கும் அரசின் நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.