அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பம்பியோ இலங்கைக்கு வருகிறார்!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பம்பியோ இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஜுன் 24 ஆம் 30 ஆம் திகதிகளுக்குள் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பம்பியோ உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

அத்துடன் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பம்பியோ இந்தியா ,ஜப்பான் மற்றும் கொரிய குடியரசு ஆகிய நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.