யாழில் சோகம்..! பிறந்து 4 நாட்களேயான பெண் குழுந்தை மரணம்.

யாழ்.பண்டத்தாிப்பு பகுதியில் பிறந்து நான்கு நாட்களேயான பெண் சிசு ஒன்று நீர் இன்மை காரணமாக மயக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் பரிதாபகரமாக உயிரிழந்த்து.
கீரிமலை வீதி , பண்டத்தரிப்பில் வசிக்கும் றொபேட் சாள்ஸ் – நகுலா என்பவர் கடந்த 5ம் திகதி பெண்குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தை ஆரோக்கியமாக இருந்த நிலையில் 6ம் திகதி வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு வீடு சென்ற சிசு 8ம் திகதிவரை ஆரோக்கியமாகவே இருந்துள்ளது.
இந்த நிலையில் 8ம் திகதி இரவு 10 மணியளவில் தாயார் குழந்தையை தூக்கிய நேரம் குழந்தை சற்று ஆரோக்கிய குறைவாக காணப்பட்டமையினால் உடனடியாக முச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் குழந்தை வழியில் மயக்கமுற்றுள்ளது.
இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்தது. குறித்த மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.